Thursday, June 23, 2016

வாங்க Cupல் Coffee சாப்பிடலாம் - பகுதி2





போன பகுதியில் வாங்க Cup Coffee சாப்பிடலாம் - பகுதி1 அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகின்றேன்.



சென்ற பகுதியில் இந்த Techniqueஐ பயன்படுத்தி சந்தை எப்படி மேலே செல்லும் என்று பார்த்தோம்.


இந்த பகுதியில் இதே Techniqueஐ பயன்படுத்தி சந்தை எவ்வாறு கீழே இறங்குகின்றது என்பதை பார்க்கலாம். இந்த முறைக்கு Reverce Cup & Handle என்று பெயர்.
இந்த முறையில் வரைபடமானது ஒரு Coffee cupஐ தலைகீழாக கவிழ்த்து வைத்தால் என்ன தோற்றதில் இருக்குமோ அப்படி பார்வைக்கு இருக்கும்.



வரைபடத்தில் Cupல் ஆரம்பித்து Handle முடியும் போது ஒரு கற்பனையான Line உருவாகும். இதற்கு Neckline என்று பெயர். பெரும்பான்மையானவர்கள் இந்த Necklineஐ கண்டறிவதில் தோற்றுவிடுவார்கள். இதை கண்டறிவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். அதற்காக கண்டறிவது கடினம் என எண்ண வேண்டாம். பழக பழக கண்டறிவது எளிதாகிவிடும். அவ்வாறு கண்டறிந்துவிட்டால் இந்த முறையில் வர்த்தகம் செய்வது எளிது.



வர்த்தகம் நடக்கும் போது இந்த Neckline Breake ஆகும் வரை wait செய்ய வேண்டும். Breake ஆன உடன் வர்த்தகம் செய்யலாம். வர்த்தகம் செய்யும் போது முதலில் Handleன் உயரத்திற்கும் பின்னர் Cupன் முழு உயரத்திற்கும் சந்தையானது இறங்கும். இங்கு நான் சந்தை என குறிபிடுவது எந்த பங்கில் இந்த Pattern வந்திருக்கிறதோ அதுவாகும்.



இந்த முறையில் Handle ஆனது Cupற்கு இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் என எந்தபக்கம் வேண்டுமானாலும் வரலாம். பார்ப்பதற்கு ஒரு Cupன் உருவத்தை ஒத்து இருக்க வேண்டும்.

இரண்டு பாகங்களுக்கும் உதாரணங்கள் அடுத்த பதிவில்...

1 comment:

  1. மிகவும் அருமையான அவசியமான தொடர்... தொடர்கிறேன்

    ReplyDelete