Saturday, June 18, 2016

பங்குசந்தை ஒரு அறிமுகம் - பாகம்2

பங்குசந்தை என்பது பெரும்பாலான மக்களால் சூதாட்டம் போன்றே பார்க்கப்படுகின்றது. எந்த ஒரு சூதாடியாலும் நிலையான வருமானத்தை சூதாட்டம் மூலம் பெறமுடியாது. பங்குசந்தை என்பது சூதாடும் இடமும் அல்ல. முறையாக திட்டமிட்டு முதலீடு செய்தால் சந்தை என்னதான் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்களுடைய முதலீட்டிற்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடாது.

முதலீட்டாளர்களை பங்குசந்தையில் மூன்று விதமாக பிரிக்கலாம்.

(i) நீண்ட கால முதலீட்டாளர்.
(ii) குறுகிய கால முதலீட்டாளர்.
(iii) தினசரி வர்த்தகர்.

நீண்டகால முதலீட்டாளர் சந்தையில் ஒரு தவறான முடிவு எடுத்தாலும் அவரால் தனது தவறை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும்.

குறுகிய கால முதலீட்டாளர், தினசரி வர்த்தகர்கள் சந்தையில் ஒரு தவறான முடிவு எடுத்தால் அவர்களின் இழப்பு விகிதம் அதிகமாக இருக்கும். ஏனேனில் இவர்களுக்கான முடிவு எடுக்கும் காலம் மிகவும் குறுகியதானதாகும். இதனாலயே அதிகமான இழப்புகள் ஏற்படுகின்றன.

அதனால் நாம் இந்த வலைப்பூவில் தினசரி மற்றும் குறுகிய கால வர்த்தகர்களை பற்றியே நமது வலைப்பூவின் முடிவுகள் இருக்கும்.

ஒரு தினசரி வர்த்தகர் எவ்வாறு சம்பாதிக்க முடியும் என்பதை விட எதை செய்யாமல் இருந்தால் நம் பணத்தை இழக்காமல் இருக்கலாம் என்பதை தெரிந்து வைத்து இருந்தாலே போதுமானது.

இதிலும் ஒரு குழப்பம் என்னவென்றால் சந்தையில் எந்த Technique வைத்து வர்த்தகம் செய்வது என்பது. ஒரு நாள் Win  ஆகும் Technique மற்றொரு நாள் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திவிடுகின்றது. 

இதற்கான எனது அனுபவ பதில் ஒரு நல்ல குத்து சண்டை வீரன் 1000 வீதமாக குத்த தெரிந்தவனை பார்த்து பயப்படமாட்டான். மாற்றாக ஒரு குத்தை 1000 முறைக்கு மேல் பழகியவனை பார்த்து பயப்படுவான். ஏனெனில் 1000 முறைக்கு மேல் பழகியவன் எதிராளி எவ்வாறு தாக்கினாலும் தடுத்து இவன் பழகிய குத்தை பயன்படுத்துவதற்கான சரியான நேரம் வரும்போது ஒரே குத்தில் எதிராளியை வீழ்த்திவிடுவான்.

இதே முறைதான் பங்குசந்தையில் தினசரி வர்த்தகத்திலும். நாம் 1000 Techniqueகளை கற்று கொள்வதை விட ஒரு Techniqueஐ சிறப்பாக கற்றுகொள்வது நல்லது. அப்பொழுதுதான் அதில் உள்ள அனைத்து விடயங்களும் தெளிவாக தெரிய வரும். நானும் அவ்வாறே வர்த்தகம் செய்துவருகின்றேன்.

அவ்வாறு பயிற்சி இல்லாதவர்களுக்காக எனது அனுபவத்தில் உள்ளவற்றை இங்கு எழுதுகின்றேன்.

எனது இந்த முயற்சி வெற்றி அடைய அனைத்து நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களை பணிவுடன் எதிர் நோக்குகின்றேன்.

No comments:

Post a Comment