Saturday, June 18, 2016

என்னைப் பற்றி

2008 பங்குசந்தை ஜனவரியில் பங்குவர்த்தகத்தில் நுழைந்தேன். அப்பொழுது இருந்த விலையில் அனைத்து பங்குகளும் கவர்ச்சியாக தெரிந்தன. உதாரணத்திற்கு ICICIBANK 2008 பிப்ரவரியில் 1100 என்ற விலையில் வாங்கினேன். 2009 மார்ச் மாதம் 300 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகி கொண்டிருந்தது. முதல் முதலீடே 75% இழப்பை சந்தித்து இருந்தது.

பின்னர் அதை விற்று வேறு ஒன்றை வாங்கி, அதுவும் நஷ்டம் அடைந்து பின்னர் விட்டதை பிடிக்கலாம் என்று FO எனப்படும் எதிர்கால வர்த்தகத்திலும் நுழைந்து அனைத்திலும் கையை சுட்டுக் கொண்டேன். இவ்வாறு எனது கையை நானே சுட்டுக் கொணடதற்கு கொடுத்த விலை ரூ.18 லட்சம் ஆகும். அப்பா கஷ்டபட்டு சம்பாதித்ததை நான் இங்கு எளிமையாக தொலைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனது நிலைமையை கீழ்கண்ட படத்தின் மூலம் எளிமையாக விளக்கலாம்.

அப்பாவிடமும் உண்மையை கூறமுடியவில்லை. நண்றாக trapல் மாட்டிய எலி போல் முழித்துக் கொண்டிருந்தேன். படத்தில் வருவது போல ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்து ஒரே பாடலில் கதாநாயகன் பணக்காரன் ஆவது போல் நடக்காதா என்று விட்டத்தை பார்த்துக் கொண்டு மனதிற்குள் புழுங்கிய நாடகள் அதிகம். ஆனால் 2009 கடைசி வரை அந்த அற்புதம் நிகழவில்லை.

பின்னர் ஒரு இரண்டு வருடம் எந்த வேலைக்கும் செல்லவில்லை, பெற்றபாவம் என்னையும் சுமந்து கொண்டு எனது தந்தை ஓடினார். பாவம் அவர் பையன் இப்படி எதற்கும் உதவாதவனாக இருக்கின்றானே என்ற கவலை மனதிற்குள் இருந்தாலும் அதை கொஞ்சம் கூட வெளியில் காட்டிக் கொள்ளாமல் என்னை என் போக்கிற்கு விட்டார், அது சரியா, தவறா தெரிந்து செய்தாரா என்று இன்று வரை எனக்கு தெரியவில்லை.

ஆனால் அந்த இரண்டு வருட இடைவெளிதான் பங்குசந்தை ரகசியங்களை புரிந்து கொள்ள உதவியது. அந்த இரண்டு வருட தேடல்தான் இன்றுவரை எனது வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவியாக இருக்கின்றது. Thanks to my அப்பா & அம்மா.

அதில் கற்ற விஷயங்களை தான் நான் இந்த வலைபதிவின் மூலம் தங்களுடன் பகிரப் போகின்றேன்.

சிறிது கால இடைவெளியிலே நான் இழந்த என்னுடைய பணத்தினை பங்குசந்தை மூலம் மீட்டிருக்க வாய்ப்பு உள்ளதா என்பதை என்னுடைய வருங்கால பதிவுகள் உங்களுக்கு நிருபிக்கும்.

..நன்றி..

No comments:

Post a Comment