Monday, June 20, 2016

பங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் முறைகள்

பங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் முறைகள்


ஒவ்வொருவரும் பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று கூறுவார்கள். இவன் பணத்தை எப்படி இழப்பது என்று சொல்லிதருகிறானே என்று என்னாதீர்கள். பங்குசந்தையை ஒரு தொழிலாக பார்ப்பவர்களுக்கு நான் சொல்வதன் அர்த்தம் புரியும். உதாரணத்திற்கு ஒரு மளிகை கடை வைப்பதற்கான முதல் தகுதி பொருட்களின் விலை எந்தகாலகட்டத்தில் அதிக விலையில் இருக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் விலை அதிகம் உள்ளகாலகட்டத்தில் பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் விலை குறைந்தவுடன் விற்கமுடியாமல் திணறினால் அதற்கு மளிகைகடையை குறை சொல்லாமல் அதன் சூடசமத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த விதியே பங்குசந்தைக்கும் பொருந்தும்.


தினசரி வர்த்தகர்கள் 100க்கு 95பேர் தங்கள் பணத்தையும், வாழ்க்கையையும் இழந்து விட்டு பங்குசந்தை என்பது சூதாடும் இடம். தினசரிவர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க இயலாது என்று புலம்பிக் கொண்டிருப்பர். ஆனால் உண்மை அதுவல்ல. மிகவும் திட்டமிட்டு வர்த்தகம் செய்தால் தினசரிவர்த்தகம் என்பது எனது அனுபவத்தில் மாதம் குறைந்தபட்சம் நமது முதலீட்டிற்கு 25% வருமானம் தரும்.


பலரும் தினசரிவர்த்தகம் என்பது சந்தை இருக்கும் அனைத்து நாட்களீலும் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். உண்மையில் அப்படி செய்தால் நமக்கு இழப்புதான் ஏற்படும். சந்தை வாய்ப்பு கொடுக்கும் போதுமட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும்.


சந்தையில் இழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்


முதல் விஷயம் பேராசை.

தன்னுடைய தகுதிக்கு மீறி Broker Limit கொடுக்கிறார் என்பதற்காக அளவிற்கு அதிகமாக வர்த்தகம் செய்வது.

எதிர்பாராத விதமாக சந்தையில் இழப்பு ஏற்பட்டால் அதை ஏற்று கொள்ள மறுத்து சந்தையுடன் போராடுவது.

போன்ற பல விஷயங்கள் உள்ளன.

இவற்றை எல்லாம் எப்படி சரிசெய்யலாம் என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்...

நன்றி.

No comments:

Post a Comment